Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்ததால் இந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது.
இரு தொகுதிகளிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
தேர்தல் அட்டவணையின்படி, வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 6-ஆம் தேதி இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இடைத்தேர்தலையொட்டி இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b