மகாராஷ்டிராவில் ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - சீனர் உட்பட 2 பேர் கைது
மும்பை, 08 செப்டம்பர் (ஹி.ச.) வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) மும்பை மண்டல பிரிவு, சீன நாட்டவர்களால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது. ஹாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்கில், டிரெட்
மகாராஷ்டிராவில் ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - சீனர் உட்பட 2 பேர் கைது


மும்பை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) மும்பை மண்டல பிரிவு, சீன நாட்டவர்களால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது.

ஹாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்கில், டிரெட்மில் மோட்டாருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 691.870 கிராம் 24 காரட் தங்கத்தை மும்பை விமான சரக்கு வளாகத்தில் வைத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர், மற்றொருவர் இறக்குமதி நிறுவனத்தை நிர்வகித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக மும்பை, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் DRI அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

சீன நாட்டவர்கள் இந்திய கூட்டாளிகளுடன் இணைந்து, முறையான வணிக இறக்குமதி என்ற போர்வையில் தங்கத்தைக் கடத்த புதிய யுக்தியை கையாண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b