அமலாக்கத்துறை ஆவணத்தை வைத்து அவையில் பேசுவது மரபா? - சட்டப்பேரவையில் கோவி.செழியன் ஆவேசம்
சென்னை, 08 செப்டம்பர் (H.S.) சட்டப்பேரவையில் அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து முதல்வர் பேசலாமா என்று திமுக கொறடா கோவி.செழியன் கடும் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், சர்க்காரியா
அமலாக்கத்துறை ஆவணத்தை வைத்து அவையில் பேசுவது மரபா? - சட்டப்பேரவையில் கோவி.செழியன் ஆவேசம்


சென்னை, 08 செப்டம்பர் (H.S.)

சட்டப்பேரவையில் அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து முதல்வர் பேசலாமா என்று திமுக கொறடா கோவி.செழியன் கடும் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், சர்க்காரியா கமிஷன் தனது விரிவான அறிக்கையில் எந்த ஒரு பக்கத்திலும், எந்த ஒரு பத்தியிலும் தன்னை குற்றவாளி என்று குறிப்பிடவே இல்லை என்று ஆதாரத்துடன் தெரிவித்தார்.

உண்மை இவ்வாறு இருக்கும்போது, வரலாற்றை திரித்து அவைக்குள் பதிவு செய்ய முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் சாடினார்.

மேலும், சர்க்காரியா கமிஷன் குறித்தும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் குறித்தும் முதல்வர் வெளியிட்ட கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதால், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முதல்வர் பதிலுரை அளித்தபோது திமுக உறுப்பினர்கள் யாரும் அதனை கவனமாக கேட்கவில்லை, அவையை புறக்கணிக்கும் வகையில் நடந்துகொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கும் அவர் பதிலடி கொடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர், இந்த விவகாரம் தொடர்பாக ஜே.சி.டி.பிரபாகர் தன்னிடம் முறையான ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகே, அதன் அடிப்படையில் முதல்வர் விஜய் தனது பதிலுரையில் அந்த கருத்துக்களை பேசினார் என்று விளக்கம் அளித்தார்.

Hindusthan Samachar / vidya.b