Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அவ்வப்போது திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளனர்.
கடைகளில் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், எவ்வித அச்சமும் இன்றி சர்வசாதாரணமாக கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்றும், திருடப்பட்ட செல்போன்களை மீட்டு தர வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam