மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி -அரசியல் கட்சி பேனர்கள், போஸ்டர்கள் அகற்றம்
செங்கல்பட்டு, 08 செப்டம்பர் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தும் நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகம் அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர
பேனர்கள்


செங்கல்பட்டு, 08 செப்டம்பர் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தும் நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகம் அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றி வருகிறது.

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த மரகதம், தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பேனர்கள், விளம்பரப் பதாகைகள் மற்றும் போஸ்டர்களை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுராந்தகம் நகரப் பகுதிகள் மட்டுமின்றி, தொகுதிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் விதிமுறைகளுக்கு முரணாக வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam