Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 08 செப்டம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டமன்றத்தில் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்வது போல பேசுகிறார்கள். காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய முதல்வர் நிதானமாக பதில் கூறலாம்.
எதிர்க்கட்சிகள் மீது பழியும், குற்றத்தையும் சுமத்த சட்டமன்ற என்ன பட்டிமன்றமா. முதல்வரின் உடல் மொழி நியாயமில்லை.
முதல்வரே இப்படி பேசும் போது நாளை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி பேசுவார்கள். பழைய ஊழல் குற்றச்சாட்டுகளைப் பேச பொதுக்கூட்டமா.
ஆதாரங்களை சட்டமன்றத்தில் கூறுவதால் என்ன பயன். ஆதாரம் இருந்தால் வழக்கு போட்டு விசாரணை நடத்தி தண்டனை கொடுக்கலாம்.
அவசர நிலை காலத்தில் என்பது நாட்டின் அரை சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அன்றைக்கு அடிப்படை உரிமைகளை பறிக்கப்பட்டது. சிறைச்சாலைகள் கொடூரமான அடக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. பலர் இறந்து போனார்கள்.
மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதும், தாக்குதலுக்கு உள்ளானவர்களை கொச்சைப்படுத்துவது போல் முதல்வர் பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
அப்படியான கொடுமைகள் விஜய்க்கு நடந்தால் அரை மணி நேரம் தாங்குவாரா?. இது அநாகரீகமானது. வன்மையான கண்டனத்திற்கு உரியது.
அமைதியான முறையில் மக்கள் போராட அனுமதி இல்லை. அப்படியான ஒரு மோசமான நிலை தவெக காட்சியில் நீடிக்கிறது. சட்டம் ஒழுங்கின் பேரில் அனைவருக்கும் சமாதி கட்டுவதா.
எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவில் இடம் பெற மாட்டோம்.
நாளை கூட்டணி தொடர்பாக, கூட்டம் வைத்திருக்கிறார்கள் நாங்கள் அந்த கூட்டத்திற்கு செல்ல போவதில்லை. திமுக, தவெக என நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை.
இடதுசாரி கட்சிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். அடுத்த மாதம் திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளோம். தேர்தல் வரும்போது அப்பொழுது உள்ள சூழலுக்கு ஏற்ற போல் முடிவு செய்வோம்.
இடைத்தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கலந்து பேசி முடிவு செய்வோம்.
தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது தவறானது, ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
தவெக அமைச்சர்களுக்குள்ளேயே கொள்கை முரண்பாடு உள்ளது என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN