Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச)
பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர் சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது என மக்கள் மன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தின் நியாயமான குரலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கேட்கத் தயாராக இல்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவைப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ள மாணிக்கம் தாகூர்,
மாணவர்களின் தொடர் மரணங்களை தீவிரமான பிரச்சினையாகக் கருதாமல், தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும், தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடி நிச்சயம் தீர்வு காண்போம் என்றும், மாணவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ