Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 08 செப்டம்பர் (ஹி.ச.)
உலக அளவில் மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கில் 2-வது பெரிய நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்க உள்ளது.
மெட்ரோ ரெயில் வழித்தடங்களின் நீளத்தை பொறுத்தவரையில், சீனா சுமார் 11 ஆயிரம் கி.மீ. நெட்வொர்க்குடன் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா 1,386 கி.மீ. மெட்ரோ ரெயில் வழித்தடங்களுடன் 2-வது இடத்திலும், இந்தியா 1,170 கி.மீ. வழித்தடங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
அமெரிக்காவை விட இந்தியா தற்போது 216 கி.மீ. மட்டுமே பின்தங்கி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் 5 நகரங்களில் 245 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே மெட்ரோ ரெயில் நெட்வொர்க் இருந்தது. கடந்த 12 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் வேகமாக விரிவுபடுத்தப்பட்டதன் காரணமாக, தற்போது நாட்டின் 26 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் மொத்த மெட்ரோ ரெயில் நெட்வொர்க் 1,170 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் மேலும் சுமார் 900 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டங்களில் ஒரு சிறிய பகுதி கூட பயன்பாட்டுக்கு வந்தால், இந்தியாவின் மெட்ரோ ரெயில் நெட்வொர்க் அமெரிக்காவை முந்தும் அளவுக்கு உயர்ந்து விடும்.
இதனால், விரைவில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2-வது பெரிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA