பிரதமர் மோடி இன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பயணம்!
புதுடெல்லி, 08 செப்டம்பர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூபாய் 35,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இன்றைய பயணத்தில் கு
Gujarat and Maharashtra today.


புதுடெல்லி, 08 செப்டம்பர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூபாய் 35,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இன்றைய பயணத்தில் குஜராத்தின் வடோதரா மற்றும் மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

இன்று நண்பகல் 12 மணிக்கு வடோதராவில் நடைபெறும் விழாவில், ரூபாய் 35,000 கோடிக்கும் மேல் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது மேற்கு பிரத்யேக சரக்கு போக்குவரத்து வழித்தடம் ஆகும்.

சுமார் ரூபாய் 20,700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 326 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடத்தின் மூன்று முக்கிய பகுதிகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதன் மூலம் நியூ சனந்த், நியூ மகர்புரா, நியூ உம்பர்கான் மற்றும் நியூ ஜே.என்.பி.டி.சி. ஆகிய முனையங்களில் இருந்து புதிய சரக்கு ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

இது நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக போக்குவரத்தை வேகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் வடோதரா - தண்டா சாலை இடையே புதிய பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மேலும், சுமார் 329 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூபாய் 9700 கோடி மதிப்பில் அமையவுள்ள மூன்று புதிய ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த திட்டங்கள் குஜராத் மாநிலத்தின் ரயில் இணைப்பை மேலும் வலுப்படுத்தும்.

குஜராத் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை 5.45 மணிக்கு மும்பை செல்கிறார்.

அங்கு உலகின் மிகப்பெரிய நிதி தொழில்நுட்ப கருத்தரங்குகளில் ஒன்றான உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவின் ஏழாவது பதிப்பை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b