Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், தேர்தல் சட்டத்தின்படி வழக்கை விசாரிக்க அனுமதிக்கக்கூடிய உரிய காரணங்கள் எதுவும் இல்லை எனக் கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, ஜெயக்குமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரது வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்ததால், பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
தற்போது தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்துறை தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடர்பான சட்டரீதியான தடை நீங்கியுள்ளது.
மேலும், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்த தோப்பு வெங்கடாசலம், அண்மையில் திமுகவில் இருந்து விலகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P