மாற்று சமூக பிரச்சினை -5 பேருக்கு நீதிமன்றக் காவல்,35 பேருக்கு ஜாமின்
புதுக்கோட்டை, 08 செப்டம்பர் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பான பிரச்சனையில் பட்டியல் சமூக மக்களை வழிபாடு செய்ய அப்பகுதியில் உள்ள மாற்று சமூகங்களை சேர்
Adhanakottai Police Station


புதுக்கோட்டை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பான பிரச்சனையில் பட்டியல் சமூக மக்களை வழிபாடு செய்ய அப்பகுதியில் உள்ள மாற்று சமூகங்களை சேர்ந்த நபர்கள் தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அப்பகுதியில் உள்ள மாற்று சமூகங்களை சேர்ந்த 40 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆதனக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 40 நபர்களும் முன் ஜாமின் பெற்று செப்டம்பர் 10ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று அவகாசம் வாங்கிய நிலையில், இன்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 10 பெண்கள் உட்பட 40 பேரும் ஆஜராகினர்.

இந்த வழக்கை பொறுப்பு நீதிபதி பன்னீர்செல்வம் விசாரணை செய்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து நபர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் மீதம் உள்ள 35 நபர்களுக்கும் ஜாமீன் வழங்கியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN