Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 08 செப்டம்பர் (ஹி.ச.)
கரூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2வது நாளாக பணிகளைப் புறக்கணித்து தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து பலமுறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. தெருக்களில் குப்பை கூளங்கள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b