Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தலைமைச் செயலக கட்டிடத்தில் இடப்பற்றாக்குறை மற்றும் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொருத்தமான இடங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், இடத்தேர்வுக்கான சாத்தியக்கூறுகள், போக்குவரத்து வசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், புதிய தலைமைச் செயலகத்திற்கான இடங்களை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b