Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
2022ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (31), கீழவீரராகவபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னக்குட்டி (31) மற்றும் முருகேசன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சின்னக்குட்டிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கில் குற்றவாளியான முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam