தியாகி சுந்தரலிங்கனார் தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) பாஞ்சாலங்குறிச்சி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதியாக விளங்கிய மாவீரன் சுந்தரலிங்கனார், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாகத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய பெருமை பெற்றவர். 16 ஏப்ரல் 17
தியாகி சுந்தரலிங்கனார் தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

பாஞ்சாலங்குறிச்சி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதியாக விளங்கிய மாவீரன் சுந்தரலிங்கனார், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாகத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய பெருமை பெற்றவர்.

16 ஏப்ரல் 1770 அன்று தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கவர்னகிரி கிராமத்தில் பிறந்த மாவீரன் சுந்தரலிங்கனார் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரின்போது, அவர்களின் வெடிமருந்துப் பணிமனைக்குள் (ஆயுதக்கிடங்கு) தன் உடலில் நெருப்பு வைத்துக் குதித்து, அதனை முற்றிலும் அழித்துத் தாய்நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தார்.

தியாகி சுந்தரலிங்கனார் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியும், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரையும் துச்சமெனக் கருதி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் அழித்து வீரமரணம் அடைந்த மாவீரருமான தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவு தினம் இன்று.

தாய்நாட்டிற்காக தனது இன்னுயிரையே துச்சமென நினைத்து வாழ்ந்து மறைந்த மாவீரர் தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினத்தில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b