5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - செப்.28ல் இறுதி விசாரணை
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளத
High court


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, பெருந்துறை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் தரப்பில் முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதால், பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவு நகல் கிடைத்த பின்னர், தடையை நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

மேலும், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனால், 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதில் தற்போதைக்கு தடை தொடர்கிறது.

Hindusthan Samachar / P YUVARAJ