கிரிண்டர் செயலி மூலம் அழைத்து வாலிபரிடம் பணம், நகை பறித்த கும்பல் கைது
நெல்லை, 08 செப்டம்பர் (ஹி.ச.) நெல்லை, மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் கிறிஸ்துராஜ புதூர் தெருவை சேர்ந்தவர் மணவாள சுதர்சன்(வயது 34). இவர் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1 மாதமாக கிரிண்டர் செயலியை இவ
Vikramasingapuram Police Station


நெல்லை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

நெல்லை, மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் கிறிஸ்துராஜ புதூர் தெருவை சேர்ந்தவர் மணவாள சுதர்சன்(வயது 34). இவர் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 1 மாதமாக கிரிண்டர் செயலியை இவர் பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு செயலி மூலம் பழகிய நபர் அழைத்ததன்பேரில் பாபநாசம் அருகே உள்ள செட்டிமேடு பஸ் நிறுத்தம் பகுதிக்கு சுதர்சன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சுதர்சனை காட்டுப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பேரும் வெளியே வந்துள்ளனர்.

தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து சுதர்சனை சரமாரியாக அந்த கும்பல் தாக்கி அவரிடம் இருந்து வெள்ளி நகைகள், ஸ்மார்ட் வாட்சி, ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டுள்ளனர்.

மேலும் சுதர்சனின் ஜி.பே. மூலமாக ரூ.5 ஆயிரத்து 100-ஐ பெற்றுக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து வி.கே.புரம் போலீசில் சுதர்சன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் சுதர்சனிடம் பணத்தை பறித்த கும்பல் அம்பை திலகர்புரம் தெருவை சேர்ந்த விமோத்கரன்(20), ஆலடியூர் செட்டிமேடு தெற்கு தெருவை சேர்ந்த ராமையா(19), அம்பை அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் பகுதியை சேர்ந்த ஆண்டிராஜா(28) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN