Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
வால்பாறை தனித்தொகுதி திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சுதாகர் தனது வேட்புமனுவில் இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என குறிப்பிட்டுவிட்டு, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருவதாக ஸ்ரீதரன் தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், சுதாகர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், மனுதாரர் வழக்கைத் திரும்பப் பெற்றார்.
இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ