மக்களைக் காக்கும் சட்டம் ஒழுங்கைப் பேண ரியல் ஆக்சன் எப்போது எடுப்பார்? - அதிமுக ஐ.டி. விங்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து அதிமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில், மூன்று File இருப்பதாக சொல்லும் முதல்வர் ஏன் அதைப்பற்றி பேசாமல் பழைய கதையை பேசுகிறார்? கேட்பது நாங்கள் அல்ல. உங்களுக்கு ஆதரவு கொடுத்து இந்த பொய்
Admk head office


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து அதிமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில்,

மூன்று File இருப்பதாக சொல்லும் முதல்வர் ஏன் அதைப்பற்றி பேசாமல் பழைய கதையை பேசுகிறார்?

கேட்பது நாங்கள் அல்ல. உங்களுக்கு ஆதரவு கொடுத்து இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியை பிடித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள்.

நாங்களும் கேட்கிறோம்…

3 File-களின் Sample என்று கூறி ஊருக்கே ஏற்கனவே தெரிந்த விஷயத்தை 23-ஆம் புலிகேசி படத்தில் வரும் ஒற்றன் போல புதிய செய்தி மாதிரியே சொல்கிறீர்களே முதலமைச்சர் விஜய்?

கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் பொதுவெளியில் பேசியவற்றை, எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பதிவுகளை Copy Paste செய்தது தானே உங்கள் நச நச பதிலுரை?

“வீராணம் மாறன்” வரலாறு எல்லாம் கலாநிதி மாறனிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்தபோது தெரியவில்லையா உங்களுக்கு?

நீங்கள் பேசியவை புதிய செய்திகள் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்றால், அரசியல் பொது அறிவே இல்லாமல் தான் இத்தனை ஆண்டுகள் பனையூரில் பள்ளிகொண்டு இருந்தீர்களா?

Insta Reels Content-க்காக கண்டதை பேசும் முதல்வர், மக்களைக் காக்கும் சட்டம் ஒழுங்கைப் பேண Instant Real Action எப்போது எடுப்பார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN