Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 09 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பி.கன்னவரம் தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
அதன்படி, காலை 9.45 மணிக்கு அமராவதியில் இருந்து புறப்படும் சந்திரபாபு நாயுடு, 10.30 மணிக்கு அம்பாஜிபேட்டை மண்டலம் இருசுமண்டா கிராமத்துக்கு செல்கிறார். பின்னர் மாசவரம் கிராமத்துக்கு சென்று விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அப்போது விவசாயிகளுக்கு பட்டா பாஸ்புத்தகங்களை வழங்குவதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிகிறார்.
இதைத்தொடர்ந்து பண்டுவாரிபேட்டையில் நடைபெறும் கிராமசபையில் மதியம் 1.55 மணிக்கு கலந்து கொண்டு பொதுமக்களிடம் பேசுகிறார். மாலை 3.15 மணிக்கு பி.கன்னவரம் தொகுதியை சேர்ந்த தெலுங்குதேச கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு மாலை 5.40 மணிக்கு சந்திரபாபு நாயுடு அமராவதிக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதல்-மந்திரியின் சுற்றுப்பயணத்தையொட்டி அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA