குரோம்பேட்டையில் பயங்கர விபத்து - பைக் மீது லாரி மோதி இளம் பெண் பலி
சென்னை, 09 செப்டம்பர் (ஹி.ச.) கும்பகோணத்தைச் சேர்ந்த ஜமுனா (23), நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி சென்னை வந்திருந்தார். குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரில் பணிபுரிந்து வரும் தனது தோழி ஸ்ரீஜா (24) உடன் தங்கியிருந்தார். இந்நிலையில், இர
Deat


சென்னை, 09 செப்டம்பர் (ஹி.ச.)

கும்பகோணத்தைச் சேர்ந்த ஜமுனா (23), நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி சென்னை வந்திருந்தார்.

குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரில் பணிபுரிந்து வரும் தனது தோழி ஸ்ரீஜா (24) உடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இருவரும் ஸ்பிளெண்டர் பைக்கில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.

ஜிஎஸ்டி சாலையில் பாண்ட்ஸ் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியுள்ளது.

லாரியில் சிக்கிய பைக் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஜமுனா கீழே விழுந்ததில், அவரது தலையில் லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்ரீஜா காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர் சதீஷ் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ