தனியார் பள்ளியில் கராத்தே, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், யோகா, பிரமிடு மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டுகள் போட்டிகள்  நடைபெற்றது
மயிலாடுதுறை, 10 ஜனவரி (ஹி.ஸ) மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் பகுதியில் உள்ள டார்கெட் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 13-ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஏடிஎஸ்பி ஜெயக்குமார் கலந்து கொண்டு போட்டிகளை
விளையாட்டு போட்டி


மயிலாடுதுறை, 10 ஜனவரி (ஹி.ஸ)

மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் பகுதியில் உள்ள டார்கெட் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 13-ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஏடிஎஸ்பி ஜெயக்குமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒலிம்பிக் தீபச்சுடர்னை இயக்குனர் சந்திரசேகர் ஏற்றி வைத்தார். விளையாட்டு நிகழ்ச்சியில் மாணவர்களின் அணிவகுப்பும், பரதநாட்டியம், மாஸ்ட்ரில், கராத்தே, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், யோகா, பிரமிடு மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டுகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுகளும் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனத் தலைவர் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J