ஏ.ஐ.உச்சி மாநாடில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு -இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
பாரிஸ், 11 ஜனவரி (ஹி.ஸ.) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிப்ரவரி 10,11ம் தேதிகளில் பிரான்சில் நடைபெற உள்ள ஏ.ஐ. உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். பிரான்சில் நடைபெறவுள்ள ஏ.ஐ., உச்சி மாநாட்டை ஏற்பாடு
ஏ.ஐ., உச்சி மாநாடில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு


பாரிஸ், 11 ஜனவரி (ஹி.ஸ.)

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிப்ரவரி 10,11ம் தேதிகளில் பிரான்சில் நடைபெற உள்ள ஏ.ஐ. உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடைபெறவுள்ள ஏ.ஐ., உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்கு, அதிபர் மேக்ரானின் முயற்சியை பிரதமர் மோடி வரவேற்றார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் இது குறித்து கூறியதாவது:

நாங்கள் ஏ.ஐ., உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியை அழைத்துள்ளோம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இம்மாநாட்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b