Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 11 ஜனவரி (ஹி.ஸ)
கோவையில் கன்சல்டன்ட்ஸ் பிரிமியர் லீக் எனும் சி.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது.
பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் கல்வித்துறை நிபுணர்கள் சார்பாக மூன்றாவது சீசனாக நடைபெற்ற இதில் கேரளா,கர்நாடகா,தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த 10 அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக போட்டிகளுக்கான துவக்க விழா சி.பி.எல்.தலைவர் மனோஜ் மானயத்தோடி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் செயலர் நீல்ராஜ் மற்றும் இயக்குனர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் ஆலோசகர்களை இணைக்கும் வகையில் நடைபெற்ற சி.பி.எல்.போட்டிகளை கோயம்புத்தூர் சிங்கம்ஸ் அணியினர் ஒருங்கிணைத்தனர்.
நான்கு நாட்கள் லீக் போட்டிகளாக நடைபெற உள்ள இது குறித்து ஒருங்கிணைப்பாளர் மனோஜ் கூறுகையில்,
தென் மாநிலங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுவதாகவும்,குறிப்பாக மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட பகுதியாக கோவை உள்ள நிலையில்,இந்த போட்டிகளை இந்த ஆண்டு இங்கு நடத்தி உள்ளதாக தெரிவித்தார்.
போட்டிகளில் மூன்று மாநிலங்களை சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் வீரர்கள் கொண்ட 11 அணிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J