Enter your Email Address to subscribe to our newsletters
பெரம்பலூர், 12 ஜனவரி (ஹி.ஸ.)
இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மற்றும் மத்திய பிரதேச பாரா விளையாட்டு மற்றும் இந்திய பாரா நீச்சல் பெடரேசன் இணைந்து நடத்திய விளையாட்டுப் போட்டி அடல்பிகாரி வாஜ்பாய் பயிற்சி மையத்தில் குவாலியர் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல்போட்டி 2024-ஆம் ஆண்டு மார்ச் 29 முதல் 31 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் பெரம்பலூர் மாவட்ட பாரா விளையாட்டு குழு மூலம் மங்களமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வி த.அம்பிகாபதி அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சீனியர் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் ப்ரஸ்டோக் பிரிவில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ப்ரிஸ்டைல் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.
ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜீவா சப் ஜூனியர் நீச்சல் பிரிவில் 50 மீட்டர் ப்ரிஸ்டைல் போட்டியில் வெற்றிபெற்று தங்கப் பதக்கமும் 50 மீட்டர் பேக்ஸ்டோக் போட்டியில் வெற்றிபெற்று வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் செல்வி த.அம்பிகாபதி அவர்களுக்கு உதவிதொகையாக ரூ.8,00,000 லட்சத்திற்கான காசோலையினையும், டி.ஜீவா அவர்களுக்கு ரூ.5,00,000 லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கி பாராட்டினார்கள்.
இவர்கள் இருவரும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளிகள் த.அம்பிகாபதி, டி.ஜீவா ஆகியோர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து, பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான உதவிகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பொற்கொடி வாசுதேவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், பயிற்சியாளர் பி.ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் சங்கத்தலைவர் ராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / Durai.J