Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 12 ஜனவரி (ஹ.ஸ.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி திருக்கோவில்., பிரசித்தி பெற்ற இக்கோவிலின் புரணமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணிகளை இன்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் நேரில் ஆய்வு செய்தார்., கோவிலின் உள்கட்டமைப்பு, சங்கிலி கருப்பசாமி சிலை, அர்த்த மண்டபம் உள்ளிட்டவற்றின் வேலைப்பாடுகளை கண்டு வியந்த எம்எல்ஏ அய்யப்பன், இந்த கட்டமைப்புகளை காணும் போது தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்ப கலைகள் போன்று உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து கோவிலின் பாதை மற்றும் தரைதள பகுதிகளில் பேவர் ப்ளாக், கழிப்பறைகள் வசதிகளை மேற்கொள்ள உறுதுணையாக இருந்து பேவர் ப்ளாக் மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார், தொடர்ந்து சீலக்காரியம்மன்-க்கு தீப ஆராதனை செய்த நிலையில் எம்எல்ஏ சாமி தரிசனம் செய்தார்.
Hindusthan Samachar / Durai.J