தேனி அருகே வீடு விற்பதாக பண மோசடி செய்த பெண் கைது!
தேனி, 13 ஜனவரி (ஹி.ஸ.) தேனி அரண்மனைப்புதூர் பசுமை நகரை சேர்ந்தவர் சுகந்தி. இவரிடம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் அவரது மனைவி கோகிலா ஆகியோர் தங்களது வீட்டை ரூ. 63.66 லட்சத்திற்கு கிரையம் செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த
திருட்டு வழக்கு


தேனி, 13 ஜனவரி (ஹி.ஸ.)

தேனி அரண்மனைப்புதூர் பசுமை நகரை சேர்ந்தவர் சுகந்தி. இவரிடம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் அவரது மனைவி கோகிலா ஆகியோர் தங்களது வீட்டை ரூ. 63.66 லட்சத்திற்கு கிரையம் செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தனர்.

இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் கணவன், மனைவி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் விஜயகுமாரை கைது செய்த நிலையில் அவனை மனைவி கோகிலாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Hindusthan Samachar / Durai.J