Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 14 ஜனவரி (ஹி.ஸ.)
கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் இன்று மாலை அதிவேகமாக வந்த டிப்பர் லாரி தாறுமாறாக ஓடியது எதிரே வந்த புல்லட் இருசக்கர வாகனம், மற்றும் ஆட்டோ மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறு காயங்கள் அடைந்த ஆட்டோவில் வந்த ஓட்டுநர் மற்றும் பயணி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இது குறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த கரும்புக்கடை காவல் துறையினர் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுநர் அதிக மதுபோதையில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வாகன ஓட்டுநர் அடையாள அட்டையில் தென்காசி மாவட்டம் என்பது தெரியவந்தது. மேலும் சரி வர பெயர் தெரியவில்லை. அவரிடம் கேட்ட போது போதையில் சுரேஷ், ரமேஷ் என்று மாறி, மாறி கூறி உளறுவதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தாறுமாறாக ஓடிய விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர் அப்பகுதி பொதுமக்கள் .
Hindusthan Samachar / Durai.J