Enter your Email Address to subscribe to our newsletters
புதுச்சேரி, 14 ஜனவரி (ஹி.ஸ.)
புதுச்சேரி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதலாம் ஆண்டு எம்.பி.ஏ மாணவி எஸ். உமா மகேஸ்வரி, இந்திய மகளிர் டென்னிஸ் பந்துக் கிரிக்கெட் அணியின் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு, நேபாளத்தின் போகாராவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய சர்வதேச டென்னிஸ் பந்துக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2024-25 இல் இந்திய அணிக்கு பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.
இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பை மற்றும் தங்கப்பதக்கம் பெற்றது.
இந்த பெருமையான சாதனை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய உமா மகேஸ்வரி,
எனது டென்னிஸ் பந்துக் கிரிக்கெட் பயணம் மிகச் சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்தது. பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு தொடர்ந்து முயற்சிகள் செய்ததன் மூலம் இன்றைய உயரத்தை அடைந்திருக்கிறேன்.
எனது வளர்ச்சியில் கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களும் மிகுந்த பங்காற்றினர். விளையாட்டிற்கும் கல்விக்கும் சமநிலை கொண்டு செல்லுமாறு அடிக்கடி ஊக்குவித்து, என்னை உற்சாகப்படுத்தி வந்தனர். எனது வெற்றிக்கு காரணமான என் ஆசிரியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இதன் வெற்றியை அர்ப்பணிக்கிறேன், என்றார்.
Hindusthan Samachar / Durai.J