Enter your Email Address to subscribe to our newsletters
இந்தியா, 15 ஜனவரி (ஹி.ச.)
ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், எல் அண்ட் டி டெக், பேங்க்,பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சியாட் மற்றும் நில்கோஆகிய நிறுவனங்கள் தங்களின் 3ம் காலாண்டு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளன.
இன்றைய வர்த்தக நாளில் மட்டும் கிட்டதட்ட 20 நிறுவனங்கள், 2025-26ம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்துக்கான முடிவுகளை வெளியிட உள்ளன. இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் அதிக முக்கியத்துவதும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து பேசிய ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா,
தற்போதைய சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் வரவிருக்கும் யூனியன் பட்ஜெட் 2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகளின் அடிப்படையில் சந்தையின் போக்கு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்ட்ராடே டிரேடிங்கைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் நிதியாண்டான 2025-26ம் நிதியாண்டின் 3வது காலாண்டு வலுவான வருவாயை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலாண்டு வருவாய் அறிவிப்புகள் பங்கு சார்ந்த வாய்ப்புகளை வழங்கக்கூடும். ஐடி, எஃப்எம்சிஜி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துத் துறைகள் ஒப்பீட்டளவில் மீள்தன்மையுடன் காணப்படுகின்றன. அதே நேரத்தில் சந்தைகள் மற்றும் பிற துறைகள் அழுத்தத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / Durai.J