Enter your Email Address to subscribe to our newsletters
திருப்பதி, 15 ஜனவரி (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்நிலையில், பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் தங்கத்தை திருடிய வழக்கில் தேவஸ்தான ஊழியர் பென்சாலய்யா (40) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஓராண்டாக பென்சாலய்யா சுமார் 10 முதல் 15 முறைர் தங்கத்தை திருடியுள்ளார் என்றும், அவரிடம் இருந்து 650 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / Durai.J