Enter your Email Address to subscribe to our newsletters
உத்தரகாண்ட், 16 ஜனவரி (ஹி.ச.)
இந்த நூற்றாண்டில் கையடக்க கருவிகளின் நாயகனாக கொண்டாடபடுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் தொடங்கி வைத்த ஆப்பிள் நிறுவண சாம்ராஜ்யம் இன்னும் பல்லாண்டுக்கு தகவல் தொழில்நுட்ப உலகில் அசைக்க முடியாதது
மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த ஸ்டீப் ஜாப்ஸின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை கொடுத்தவர் இந்திய ஆன்மீக ஞானி நீம் கரோலி பாபா
1970 களில் ஸ்டீப் ஜாப்ஸ் உச்சகட்ட மனநெருக்கடியில் இருந்தார், தொட்டதெல்லாம் தோல்வி, எதிர்காலம் தெரியா அளவு நெருக்கடி, திரும்பும் திசையெல்லாம் அவமானம் என அவரின் வாழ்வு இருளில் இருந்தது
எதிர்காலம் தெரியா கடும் இருளில் சிக்கியிருந்தவருக்கு மன ஆறுதல் தேவைபட்டது
அதை அவரின் மதம் கொடுக்கமுடியவில்லை, அமெரிக்க மனநல மருத்துவர்களால் கொடுக்க முடியவில்லை,பெரும் பெரும் தொழிலதிபர்களால் யாராலும் தன்முனைப்பு கும்பலாலும் கொடுக்க முடியவில்லை
மேல்நாட்டில் மனநிம்மதியினை ஆன்மீகத்தில் அடையமுடியும் என நம்புவோர் இந்தியாவில் வரும் இடங்கள் இரண்டு
ஒன்று ஹிமாலயம் இன்னொன்று தமிழக திருவண்ணாமலை
ஸ்டீவ் ஜாப்ஸ் இங்கெல்லாம் சுற்றினார், அன்று அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது, வாழ்வில் வெறுத்துபோன ஒரு மேல்நாட்டு இளைஞன் அவ்வளவுதான்
கடைசியில் அவர் சரணடைந்த இடம் உத்திரகாண்டில் இருக்கும் மகா ஞானி நீம் கரோலி பாபா ஆஸ்ரமம்
காஞ்சி எனும் சொல் அங்கு கைஞ்சி என அழைக்கபடும், உத்திரகாண்ட் கைஞ்சியில் கரோலிபாபா ஆஸ்ரமம் உண்டு, மகானான அவர் திருவண்ணாமலை ரமணரின் சாயல்
அவரை கண்டால் தன் துயரம் தீரும் என சென்றார் ஸ்டீப் ஜாப்ஸ், ஆனால் கரோலி பாபா சில மாதங்களுக்கு முன்பே காலமாகியிருந்தார்
ஆனாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் அங்கு தங்கினார், அங்கு அவர் அமர்ந்த சில நாட்களிலே அவர் உள்ளம் தெளிந்தது, பெரிய தெளிவு பிறந்தது
அந்த கரோலி பாபாவின் ஒளி ஒரு சக்தியாக தன்னுள் பாய்வதை உணர்ந்தார், பின் மாபெரும் தெளிவு பெற்றவராக , அச்சம் பயம் குழப்பம் நீங்கியவராக அமெரிக்கா திரும்பினார்
கரோலி பாபாவில் பிரசாதமாக கொடுக்கபட்ட ஆப்பிளை தன்னோடு வைத்திருந்தார், அதையே தன் கம்பெனியின் அதிகார லட்சினை ஆக்கினார்
ஆப்பிள் நிறுவனர வாழ்வு சொல்கின்றது , பிறப்பால் கிறிஸ்தவரான அவர் இந்துமதத்தில்தான் மனநிறைவு அடைந்தார், தெளிவு அடைந்தார், உலகின் சக்திமிக்க மனிதரானார்
அவரின் வாழ்வு கரோலி பாபாவின் அருளால் மாறியபின் அமெரிக்க பெண் லோரன் பாவல் என்பவரை திருமணம் செய்தார், அவரும் முழு இந்து
இன்று அந்த லோரன் பாவல் ஜாப்ஸ், கயாவில் கணவனுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு திரிவேணி சங்கத்தில் நீராட பிரக்யாகை வந்திருக்கின்றார்
ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மகா கும்பமேளாவுக்கு வந்திருப்பதை தேசம் வரவேற்கின்றது
காவி அணிந்து ருத்திராட்ச மாலை அணிந்து அந்த அம்மையார் சுத்த இந்துவாக வந்தது நெஞ்சை நெகிழவைக்கும் காட்சி
நம்மில் ஒருவராக அந்த மேல்நாட்டு இந்து சகோதரியினை வரவேற்பதில் தேசம் பெருமையும் மகிழ்வும் கொள்கின்றது
இந்த ஞான தாத்பரியத்தில் கலந்துவிட்ட அந்த மகளை நம்மில் ஒருவராக தேசம் வரவேற்று கொண்டிருக்கின்றது
மேல் நாட்டு விஞ்ஞானிகளெல்லாம் ஒரு காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ரிஷிகள், உலக மக்களின் நலம் மக்களின் நல்வாழவு அவர்கள் சிரமம் போக்கும் சிந்தனை தவம் என மக்களுக்காக இங்கு தவமிருந்த மகான்களின் மறுபிறப்பு அவர்கள்
தங்கள் தவபயனாய் இந்த விஞ்ஞான யுகத்தில் அவர்கள் தங்கள் முற்பிறப்பின் தொடர்ச்சியால் பல அரிய சாதனைகளை நிகழ்த்துகின்றார்கள், அதனால் இயல்பால் இந்தியா எனும் யோகியர் பூமியிடம் அவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வருகின்றது, இங்கு ஆச்சரியபட் ஏதுமில்லை என காஞ்சி மகா பெரியவர் சொன்னது முழுக்க சரி என்பது கண்முன் தெரிகின்றது
(இந்த ஸ்டீவ் ஜாப்ஸ் கரோலி பாபாவின் ஆஸ்ரமத்தில் பெற்ற ஆப்பிளை கொண்டே அந்த பெயரை கொண்டே தன் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J