Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.)
ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைத்து டாக்கிங் செயல்முறையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.
இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30 அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 7-ம் தேதி அன்று முதல்முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. பிறகு. ஜனவரி 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
ஆனால், ஜனவரி 9-ம் தேதி அன்றும் சிறிய தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டு வந்தன. இந்நிலையில், விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக டாக்கிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது
Hindusthan Samachar / Durai.J