Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 ஜனவரி (ஹி.ச)
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி தியாகராய நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து புகழேந்தி கூறியதாவது,
தலைவர் வளர்த்த இயக்கம் இன்றைய தினம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதிமுக மற்றும் அதிமுகவின் தலைவர்கள் பெயரை கூறி எவ்வளவும் சொத்து சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்துக் கொண்டு உள்ளனர், இந்த கட்சி தோய்ந்து கொண்டு இருப்பதற்கு காரணமாக இருக்கிறோம் என்று மறந்து இன்றைய தினம் அதிமுக தலைவர்கள் எனக் கூறி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாஜகவின் அடிமைகளாக மாறிவிட்டார்கள், ஆனால் அதனை வெளியில் கூறாமல் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
ஓபிஎஸ் பாஜக சொல்லை தட்டமாட்டேன் என்கின்ற நிலையில் உள்ளார்.
சசிகலா இப்பொழுது உள்ள அரசை மட்டும் குறைகூறுகிறார் ஆனால் மத்திய அரசை மட்டும் குறைகூற மறுக்கிறார்கள்.
இந்த இயக்கம் காப்பாற்றபட வேண்டும் ஆட்சியில் தொடர்ந்து அமர வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் மனதார இருக்குமே ஆனால், தலைவர் பிறந்த நாள் இன்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பழனிச்சாமி அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும், அவர் திருந்த வேண்டும்.. பழனிசாமி இறங்கி வர வேண்டும்.. ஓ பன்னீர்செல்வம் என்ன உலக மகா தவறு செய்து விட்டார்?
ஈரோடு மாவட்ட இடைத் தேர்தலை தவிர்த்ததை தாண்டி என்ன நிலை?.. பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இப்போது நின்றாள் டெபாசிட் போய் விடும், சரித்திரங்களை படைத்த இயக்கம் இந்த இடைத் தேர்தலில் நிற்க முடியாமல் நடு ரோட்டில் இருக்கிறது..
சசிகலா எனும் சின்னம்மாவும் இறங்கி வர வேண்டும்.. பாஜகவுடன் கூட்டணி கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் இறங்கி வாருங்கள்.. கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள் கட்சி பொய்விடும்.
பாஜகவிடம் கூட்டணி வைப்பதும் வைக்காமல் இருப்பதும் உங்களைச் சார்ந்தது ஆனால் பாஜகவை பார்த்து பயந்து அதிமுக-வை அழித்து விடாதிர்கள்..
சீமானை தலைவர் என பாஜக ஏற்றுக் கொண்டால் தமிழகத்தில் இருக்கும் டெபாசிட்டை கூட பாஜக இழந்து விடும் எனக் கூறினார்..
Hindusthan Samachar / Raj