இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி, 17 ஜனவரி (ஹி.ச.) தூத்துக்குடியில் மாவட்டத்தில் பீடி இலைகள் கடத்தல் தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் இனிகோ நகர் கடற்கரையில் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் கியூ பிராஞ்ச் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின் போது இலங்கைக்க
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்


தூத்துக்குடி, 17 ஜனவரி (ஹி.ச.)

தூத்துக்குடியில் மாவட்டத்தில் பீடி இலைகள் கடத்தல் தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் இனிகோ நகர் கடற்கரையில் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் கியூ பிராஞ்ச் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் சோதனையின் பொது வாகனம் ஒட்டி வந்த கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பி ஓடிய கடத்தல் காரர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b