Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 17 ஜனவரி (ஹி.ச)
மதுரை மத்திய சிறையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பணியில் இருந்து வந்த அஸ்ட்ரோ என்ற டிஎஸ்பி (RANK) பதவியில் இருந்த நாய் வயது முதிர்வால் இன்று காலை உயிரிழந்தது.
மதுரை மத்திய சிறையில் தினசரி காலை, மாலை போதை பொருள் தடுப்பு தொடர்பான சோதனைகளில் ஈடுபட்டு வந்த அஸ்ட்ரோ நாய் உயிரிழந்த சம்பவம் சிறைத்துறை காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உயிரிழந்த அஸ்ட்ரோ நாய்க்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மதுரை மத்திய சிறையில் உள்ள வளாகத்தில் புதைக்கப்பட்டது.
டிஐஜி முருகேசன் எஸ்பிசதீஷ்குமார் , ஜெயிலர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Hindusthan Samachar / Raj