Enter your Email Address to subscribe to our newsletters
மயிலாடுதுறை, 17 ஜனவரி (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கூறைநாடு கொண்டாரட்டி தெருவில் அமைந்துள்ளது புனித அந்தோனியார் ஆலயம் இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பொங்கல் நாளில் திருப்பலி திருத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம் அதன் ஒரு பகுதியாக இன்று பூமி வெப்பமாவதை தடுக்கவும் விவசாயிகளுக்கு மழை நன்றாக பெய்யவும் உலகில் உள்ள அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ வேண்டி கூட்டு திருப்பலியும் திருத்தேர் பவணியும் நடைபெற்றது.
இந்த திருத்தேர் பவனி ஆனது தஞ்சை மறை மாவட்ட மேதகு 4வது ஆயர் சகாயராஜ் மற்றும் புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை இணைந்து கூட்டு திருப்பள்ளியும் அதனைத் தொடர்ந்து திருத்தேர்களுக்கு ஜெபம் செய்து ஆசீர்வதித்து திருத்தேர்களின் பவனி ஆனது வீதி உலா சென்றது.
இதனை வழியெங்கும் அனைத்து மத மக்கள் ஒன்றிணைந்து தேர் பவணியில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர் சமூக நல்லிணக்கத்துடன் நடைபெற்ற இந்த திருத்தேர் பவானியை அனைத்து மத மக்களும் வழிபட்டனர் .
Hindusthan Samachar / Durai.J