தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!
சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.) தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்கள் தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர். இதன் முதல் நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர
பிரஸ்மீட்


சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்கள் தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர். இதன் முதல் நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் முன்னிலையில் துவங்கப்பட உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் பாலசுப்ரமணியன் பேசுகையில்,

சிவபெருமானின் அருமைகளையும், சிவநெறியின் பெருமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இனிய பண்ணுடன் பக்தி ததும்ப பாடிய பாடல்கள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.

பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தேவாரம் எனும் அற்புத கொடையை நமக்கு அருளிச் சென்ற ‘தேவார நாயன்மார்களுக்கு’ நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் சத்குருவின் வழிக்காட்டுதலில் சமஸ்கிருதி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.

சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி பள்ளியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் மொத்தம் 4 குழுக்களாக பிரிந்து சென்று இந்த தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அந்த வகையில் பேரூர் ஆதீனத்தில் ஜன 17 ஆம் தேதி துவங்கும் இந்நிகழ்ச்சி ஜனவரி 18-ஆம் தேதி காமாட்சி புரம் ஆதீனம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

அதே போல் ஜனவரி 19-ஆம் தேதி சிரவை ஆதீனம், மயிலை கபாலீஸ்வரர் கோவில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், திருவானைக்கால் ஜம்புகேஸ்வரர் கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஜனவரி 20-ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. என்று பேசினார்.

Hindusthan Samachar / Durai.J