அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை - காவல்துறை விசாரணை!!
கோவை, 9 ஜனவரி (ஹி.ஷ) கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டாக பகுதிகளான ஆலாந்துறை அடுத்த நரசிபுரம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே உள்ள பலா மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அப்பகுதிக்
தற்கொலை


கோவை, 9 ஜனவரி (ஹி.ஷ)

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டாக பகுதிகளான ஆலாந்துறை அடுத்த நரசிபுரம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே உள்ள பலா மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

அப்பகுதிக்குச் சென்ற விவசாயி ஒருவர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர். அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபரை சோதனை செய்த காவல் துறையினர் அவரிடம் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்ற எந்த அடையாளமும் இல்லாததால் அவர் யார் ? எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என விசாரணை நடத்தி வருகின்றன.

Hindusthan Samachar / Durai.J