Enter your Email Address to subscribe to our newsletters



கோவை, 24 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் dude திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அந்தப் படத்தின் நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் கீர்த்திஸ்வரன் ஆகியோர் மாணவர் மத்தியில் உரையாற்றினர்.
கோவைக்கு வந்தது குறித்து மாணவர்கள் இடையே பேசினர்.
பின்னர் செல்பி வீடியோ எடுப்பதற்காக மேடையில் ராம்ப் வாக் செல்வதற்காக சென்ற போது அங்க அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளில் அருகே பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்கள் எடுத்த செல்பி வீடியோவில் இடம் பெற வேண்டும் என்பதற்காக மாணவர்கள் அங்கு இருந்த தடுப்புகள் மீது ஏறி தள்ளியதில் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு அதில் தடுப்புகள் சரிந்து 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே விழுந்தனர்.
அவர்களை அங்கு இருந்த பவுசர்கள் தூக்கி விட்டு நெரிசலை சரி செய்தனர், இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் தள்ளு முள்ளு ஏற்படுத்த வேண்டாம் என்று செய்கை மூலம் காண்பித்தார்.
நிகழ்ச்சி நிறைவு அடைந்த பின்னர் அங்கு இருந்து சென்று விட்டார்.
செல்பி எடுக்கும் பொழுது சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan