மறைந்த நடிகர் விவேக் பிறந்த நாளையொட்டி சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய விவேக் மனைவி அருட்செல்வி
சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.) மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் பிறந்த நாளையொட்டி சென்னை சாலிகிராமத்தில் அவரது மனைவி அருள்செல்வி சாலையோரம் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். அதேபோன்று பொதுமக்களுக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்கினார். இதன் பிறகு செய்திய
Vivek


சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் பிறந்த நாளையொட்டி சென்னை சாலிகிராமத்தில் அவரது மனைவி அருள்செல்வி சாலையோரம் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

அதேபோன்று பொதுமக்களுக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்கினார்.

இதன் பிறகு செய்தியாளரை சந்தித்து பேசிய அவர்,

ஒவ்வொரு வருடமும் எனது கணவர் விவேக்கின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று சென்னையில் ஒன்பது இடங்களில் மரக்கன்று நடுவதற்காக ஏற்பாடு செய்துள்ளோம்.

அவர் இறந்த பிறகும் என்னால் முடிந்தவரை தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டு வருகிறேன்.

இன்று சாலிகிராமம் பசுமையாக இருப்பதற்கு காரணம் எனது கணவர் விவேக் மற்றும் அவர் உடன் உள்ளவர்கள் கடந்த 20 வருடமாக பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தது தான் காரணம்.

அவர் மறைந்த பிறகும் பல இடங்களில் பல மரங்களின் வாயிலாக அவர் நினைவுகள் வாழ்ந்து வருகிறது.

பலரும் அவர் நட்டு வைத்த மரங்களை பற்றி என்னிடம் வந்து அவர் நினைவாக தெரிவிப்பார்கள்.

அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

விவேக் எப்பொழுதும் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

அவர் இருக்கும் போது அந்த பணி மிகவும் வேகமாக நடந்தது.

தற்பொழுது அந்த பணியின் வேகம் குறைந்துள்ளது.

ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ