Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.)
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10ல் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பலியான டாக்டர் உமர் கடந்த 10-ந் தேதி அரியானாவில் இருந்து டெல்லி செங்கோட்டை வந்த பாதைகளில் போலீசார் இடைவிடாமல் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்.ஐ.ஏ. விடுவித்துள்ளது. முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்ட மருத்துவர் உமருக்கும் பரிதாபாத்தின் அல்-பலா பல்கலைக். மருத்துவர்களுக்கும் இச்சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. இதனால் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b