Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி,20 நவம்பர் (ஹி.ச.)
கோயம்புத்தூர் மக்களின் அன்பு, பாசம் எப்போதும் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோயம்புத்தூரின் வரவேற்பு எப்போதும் போல் உண்மையில் சிறப்பாக இருந்தது. துடிப்பான இந்த நகரைச் சேர்ந்த மக்களின் அன்பு, பாசம் மற்றும் வாழ்த்துகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025 மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது இயற்கை வேளாண்மையின் மிகவும் பொருத்தமான பொருள் குறித்து சிறந்த நடைமுறைகள் பற்றிய கூடுதல் விவாதத்தையும் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது. இந்தத் துறையில் விவசாயிகள் செய்யும் புதுமையான பணிகளைக் காண்பதும் கூட மகிழ்ச்சியாக இருந்தது.
கடந்த 11 ஆண்டுகளில், இந்திய வேளாண் துறையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்களால் நமது இளைஞர்கள் இப்போது இந்தத் துறையிலும் ஏராளமான வாய்ப்புகளைக் காண்கிறார்கள். இந்த மாற்றத்தில் இயற்கை விவசாயம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஓராண்டுக்குள், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டிலும் தென்னிந்தியா முழுவதும், நமது விவசாயிகள் தொடர்ந்து இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களின் முயற்சிகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கின்றன. இயற்கை வேளாண்மை உண்மையிலேயே அறிவியல்பூர்வ ஆதரவு பெற்ற இயக்கமாகப் பரிணமிப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM