Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந் நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.
கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு, மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி, நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு.
என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடுபோராடும் தமிழ் நாடு வெல்லும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ