Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை முரண்பாடாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ள பாமக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியை சந்தித்து புகார் தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த போது,
கடந்த 4-ஆம் தேதி வாழப்பாடியில் எங்கள் இயக்கத்தினர்மீது கொடூரமாக தாக்குதல் நடைபெற்றது. மண்டை உடைந்து உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார்கள்.
இந்த தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் போராட்டம் செய்து FIR போட வைத்தோம்.
ஆனால் பாதிக்கப்பட்ட எங்கள் எட்டு பேர்மீதே காவல்துறை FIR பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது.
நாங்கள் அளித்த மனுவில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்வது எப்படி நியாயம்? சமூக நீதி வழக்கறிஞர் பாலு அவர்களுடன் சென்ற வாரமே டிஜிபியை சந்தித்து நடுநிலையாக செயல்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம்.
இன்று 15 நாட்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இன்றும் டிஜிபியுடன் 15 நிமிடங்களுக்கு மேல் பேசியோம். விசாரணை செய்வதாக கூறினாலும் எங்களுக்கு எந்தத் திருப்தியும் இல்லை. மாநிலத் தலைவர், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ய கூறிய கோரிக்கைகளுக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பவம் நடந்தே 17 நாட்கள் ஆகிவிட்டது. அரசியல் அழுத்தத்தில் நியாயம் புறக்கணிக்கப்பட்டு அநியாயம் ஜெயித்துள்ளது.
எங்கள் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் உடனே கைது செய்துவிட்டனர். ஆனால் நாங்கள் கொடுத்த புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாடு காவல்துறை நடுநிலையாக செயல்பட வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அன்புமணியிடம் ஆலோசித்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.
இதன்மூலம் காவல்துறையின் செயல்பாடுகளில் முரண்பாடு ஏற்பட்டு வருவதாக சதாசிவம் குற்றம் சாட்டினார்.
மேலும் மேட்டூர் அணையில் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிமன்றத்திலும் இப்போது எங்கள் தரப்பு மனு விசாரணைக்கு வர உள்ளது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ