Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 20 நவம்பர் (ஹி.ச.)
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று (நவ 20) பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த சூழலில், ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று (நவ 20) பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்து வருகிறார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டு 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.
மேலும், அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.
மவுன விரதம் குறித்து அறிவிக்கையில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது,
கடந்த மூன்று ஆண்டுகளாக நான் உழைத்ததை விட இரண்டு மடங்கு கடினமாக உழைப்பேன். என் முழு பலத்தையும் பயன்படுத்துவேன். பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை.
பிஹாரை மேம்படுத்துவதற்கான எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின்வாங்க மாட்டேன்.
பிஹார் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டும், ஏன் ஒரு புதிய அமைப்பு வேண்டும் என்பதை நான் அவர்களுக்கு விளக்கத் தவறிவிட்டேன். எனவே, அதற்குப் பிராயச்சித்தமாக, நவம்பர் 20 ஆம் தேதி காந்தி பிதிஹர்வா ஆசிரமத்தில் ஒரு நாள் மவுன விரதம் அனுசரிப்பேன்.
நாங்கள் தவறுகள் செய்திருக்கலாம்,ஆனால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b