Enter your Email Address to subscribe to our newsletters

கயத்தாறு, 20 நவம்பர் (ஹி.ச.)
கயத்தார் தாலுகா முடுக்கலான்குளம் கிராம சர்வே விவசாய நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் 10/1 அடங்கல் கொடுக்க தொடர்ந்து மறுத்துவரும் சூழலில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
உடனடியாக 10/1 அடங்கல் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்ககோரி கயத்தார் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் நடைபெற்றது. CPI(M) மாவட்டசெயலாளர் K P. ஆறுமுகம், விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் G.ராமசுப்பு, கயத்தாறு ஒன்றிய செயலாளர் சீனிபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜ். CPI(M) கயத்தார் ஒன்றிய செயலாளர் M. சாலமன்ராஜ். விவசாயிகள் சங்க கயத்தாறு ஒன்றிய தலைவர் தவமணி. மாவட்டக்குழு உறுப்பினர் முடுக்கலாங்குளம் ராமசுப்பு, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் முனியசாமி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடனடியாக பயிர் அடங்கல் வழங்குவதாக ஒப்புக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J