Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 06.08.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
அதற்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வின் முடிவுகள் 17.11.2025 அன்று சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது.
செய்யப்பட்ட நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு விண்ணப்பத்தாரர்களுக்கான நேர்முகத் தேர்வு, சென்னையில் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், (NICM) 12 வது மெயின் ரோடு. 4வது அவென்யூ, ஜவஹர் காலனி, அண்ணா நகர், சென்னை 600 040-ல் 26.11.2025 அன்று நடைபெறவுள்ளது.
இந்நேர்முகத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை இன்று (20.11..2025 வியாழக்கிழமை) முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய www.drbchn.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு chennaidrb@gmail.com மின்னஞ்சல் மற்றும் 044-24614289 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b