வருகிற 1-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - 10 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி, 23 நவம்பர் (ஹி.ச.) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. 19-ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் முக்கியமாக அணுசக்தி மச
வருகிற 1-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - 10 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்


புதுடெல்லி, 23 நவம்பர் (ஹி.ச.)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.

19-ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தியாவில் அணுசக்தியின் பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறையை நிர்வகிக்கும் இந்த மசோதா மூலம் சிவில் அணுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா, கார்பரேட் சட்டங்கள் (திருத்தம்) மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM