தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுடெல்லி,23 நவம்பர் (ஹி.ச.) தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த
தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


புதுடெல்லி,23 நவம்பர் (ஹி.ச.)

தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புயல் உருவானால், ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை செய்த சென்யார் பெயர் இப்புயலுக்கு வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், லட்சத்தீவு, அந்தமான் நிகோபர் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்தமான் நிகோபர் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையின்போது 40 - 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM